

கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடனான சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்ததற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ராஜ்நாத் சிங் தன் ட்வீட்டில் ‘ராணுவ வீரர்களின் தியாகம் ஆழமான வருத்தத்தை ஏற்படுத்துகிறது வலிநிறைந்தது’ என்று ட்வீட் செய்தார். அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் தன் ட்வீட்டில் சீனாவைக் குறிப்பிடாமல் இருந்தது ஏன் என்றும் இது இந்திய ராணுவத்தைப் புண்படுத்துவதுமாகும், என்று சாடினார்.
ராகுல் காந்தி தன் ட்வீட்டில் ராஜ்நாத் சிங்குக்கு எழுப்பிய 5 கேள்விகள்:
அது வலி நிறைந்தது என்றால், 1. ஏன் சீனா பெயரைக் குறிப்பிடாமல் இந்திய ராணுவத்தை புண்படுத்த வேண்டும்?
2. இரங்கல் தெரிவிக்க ஏன் 2 நாட்கள் ஆனது?
3. வீரர்கள் தியாகம் செய்யும் தருணத்தில் ஏன் பேரணியில் பேச வேண்டும்?
4. ஏன் ஒளிந்து கொண்டு ஊடகங்கள் மூலம் ராணுவத்தைக் குற்றம்சாட்ட வைக்க வேண்டும்?
5. விலைக்கு வாங்கிய ஊடகங்கள் மூலம் அரசை விமர்சிப்பதற்குப் பதிலாக ராணுவத்தின் மீது ஏன் பழிசுமத்தச் செய்ய வேண்டும்?
இவ்வாறு 5 கேள்விகளை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.