

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற புள்ளியியல் துறை பேராசிரியர் பார்மர் முகர்ஜி கூறுகையில், ‘‘அடுத்த இரண்டு மாதங்களில் நிலவரம் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்‘‘ என்றார்.
வாஷிங்டனில் இருந்து செயல்படும் நோய்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் மையத்தின் டெல்லி இயக்குநர் ரமணன் லட்சுமிநாராயணன் கூறுகையில், ‘‘மேலும் தொடர்ந்து ஊரடங்கை இந்தியாவால் தாங்க முடியாது. எனவே, கடைகளை திறக்க அனுமதித்து கரோனாவுடன் வாழபழகுங்கள் என்ற கோஷம்தான் சரியாக இருக்கும். தடுப்பு மருந்துகண்டுபிடிக்கும் வரை அல்லதுநோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் வரைகரோனாவுடன் வாழ வேண்டியிருக்கும்’’ என்றார்.