அதிபர் ட்ரம்ப் அறிவித்தபடி 100 வென்டிலேட்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

அதிபர் ட்ரம்ப் அறிவித்தபடி 100 வென்டிலேட்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

Published on

கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக இந்தியாவுக்கு முதல் தொகுப்பாக 100 செயற்கை சுவாசக் கருவிகளை (வென்டிலேட்டர்கள்) நன்கொடையாக நேற்று வழங்கியது அமெரிக்கா.

கரோனா வைரஸ் தொற்று முற்றிய நிலையில் அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் சுவாசக்கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா அன்பளிப்பாக வழங்கும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப்தெரிவித்திருந்தார். அதற்காகபிரதமர் நரேந்திர மோடியும் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அதன்படி சிகாகோ நகரில் இருந்து தருவிக்கப்பட்ட இந்தசுவாசக்கருவிகளை அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு முகமை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத்ஜே ஜஸ்டரிடம் ஒப்படைத்தது.இவற்றை இந்திய செஞ்சிலுவை சங்க தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அதிகாரிகளிடம் ஜஸ்டர் வழங்கினார்.

அமெரிக்காவைச் சேர்ந்தஜால் நிறுவனம் இவற்றை தயாரித்துள்ளது. இந்த சுவாசக் கருவிகள் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in