தெலங்கானா தேர்தல் லஞ்ச விவகாரம்: ஆந்திர பேரவையில் காரசார விவாதம்

தெலங்கானா தேர்தல் லஞ்ச விவகாரம்: ஆந்திர பேரவையில் காரசார விவாதம்
Updated on
1 min read

தெலங்கானா மேலவை தேர்தலில், தெலுங்கு தேச கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய இக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ரேவந்த் ரெட்டி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு உள்ளதாக நேற்று ஆந்திர பேரவை யில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டி னார். மேலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்க வேண்டுமென சபாநாயகரை முற்றுகையிட்டனர். இதனால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

வீடியோ மற்றும் ஆடியோ போன்ற பலமான சாட்சிகள், முதல் வரின் பேச்சு இதில் அடங்கி இருந்தும், தவறை மறைக்க முயற் சிக்கின்றனர் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் அச்ச நாயுடு பதிலளிக்கை யில், தவறான வழிகளில் பணம் சேர்த்து, சிறைக்கு சென்று, நீதி மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள குற்றவாளியான ஜெகன் மோகனுக்கு, முதல்வர் குறித்து பேச எந்தவித தகுதியும் இல்லை என கூறினார். பின்னர் அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in