தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை; காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவாக வாய்ப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தென்மேற்குப் பருவமழை மேற்கு மத்தியப்பிரதேசத்தின் சில பகுதிகள், கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் பல பகுதிகளில் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்மேற்கு பருவமழை, மேற்கு மத்தியப்பிரதேசத்தின் மேலும் சில பகுதிகள், கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மேலும் பல பகுதிகளில் முன்னேறியுள்ளது.

பருவமழையின் வடஎல்லை, கண்டலா, அகமதாபாத், இந்தூர், ரெய்சென், கஜூராஹோ, ஃபதேபூர், பரேஜ் வழியாகச் செல்கிறது.

வடக்கு வங்கக் கடலுக்கு மேற்பகுதியிலும், அண்டைப் பகுதிகளிலும், காற்றழுத்த தாழ்வுமண்டலம் இம்மாதம் 19-ம் தேதி உருவாகக்கூடும்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in