

ஆந்திராவின் கோதாவரி மாவட்டங் களைத் தொடர்ந்து, ஹைதராபாதிலும் பைக்கில் வந்து ஊசி போட்டு தப்பிச் செல்லும் மர்ம நபர் பீதியை கிளப்பி வருகிறார்.
மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் கடந்த மாதம் மர்ம நபர் பைக்கில் வந்து பெண்களுக்கு ஊசி போட்டு தப்பி வந்தார். இவரைப் பிடிக்க போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். கடந்த 10 நாட் களாக தெலங்கானா மாநிலத்திலும் பலருக்கு ஊசி போட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் கூகட்பல்லி அருகே உள்ள நிஜாம் பேட்டை பகுதியில் சேகர் எனும் இளைஞருக்கு மர்ம நபர் நேற்று ஊசி போட்டுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸில் சேகர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக் கப்பட்ட சேகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊசி போடும் மர்ம நபரால் ஹைதராபத் திலும் பீதி நிலவுகிறது.