குஜராத் மாடல் வெளிப்பட்டுவிட்டது: நாட்டிலேயே அதிகமான கரோனா உயிரிழப்பு; ராகுல் காந்தி சாடல்

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
1 min read


நாட்டிலேயே கரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பு கொண்ட மாநிலமாக குஜராத் இருப்பது குறித்து ஆளும் மாநில பாஜக அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடுமையாகச் சாடியுள்ளார்.

நாட்டில் கரோனாவால் உயிரிழக்கும் சராசரி விகிதத்தைவிட இரு மடங்கு குஜராத்தில் இருப்பதாவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கரோனா உயிரிழப்பு என்பது 3.73 சதவீதம்தான் ஆனால், கரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் கரோனா உயிரிழப்பு 6.25 சதவீதமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது காங்கிரஸ் தலைமையிலான அரசு, மற்றும் ஆதரவில் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் கரோனா வைரஸைக் கையாள்வது சிறப்பாக இருந்து வருகிறது, உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது என்பதை ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆனால், பாஜகக ஆளும் குஜராத் மாநிலம் கரோனா பாதிப்பில் 4-வது இடத்திலும், உயிரிழப்பில் முதலிடத்திலும் இருந்து வருகிறது என்பதை ஒப்பிட்டுள்ளார்

காங்கிரஸ்எம்.பி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “மாநில
வாரயாக கரோனா உயிரிழப்பு விகிதம்: குஜராத் 6.25 சதவீதம், மகராஷ்டிார 3.73 சதவீதம், ராஜஸ்தான் 2.32 சதவீதம், பஞ்சாப் 2.17 சதவீம், புதுச்சேரி 1.98 சதவீதம், ஜார்கண்ட் 0.5 சதவீதம், சத்தீஸ்கர் 0.35 சதவீதம்
குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்

நாட்டிலேயே அதிகமான கரோனா நோயாளிகள் உள்ள மாநிலங்களில் 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 24 ஆயிரத்து 55 ேபர் பாதிக்கப்பட்டுள்ளனர்,1,505 பேர் உயிரிழந்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்க காந்தி ட்விட்டரில் நேற்று பதிவிட்ட கருத்தில் லாக்டவுனைத் தவறாகக் கையாண்டு, கரோனாவை ஒழிப்பதற்கு பதிலாக பொருளதாாரத்தை வீழ்ச்சி அடையச் செய்துவிட்டது மத்தியஅரசு என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த ட்வீட்டில் இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐயன்ஸ்டீன் தத்துவமான அறியாமையைவிட, அகங்காரம் ஆபத்தானது எனும் பொன்மொழியைக் குறிப்பிட்டிருந்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in