

ஆந்திராவில் நேற்று வனத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை யில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் நேற்று வனத்துறை அதிகாரிகள் கொண்டபேட்டா எனும் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் கடத்த தயாராக இருந்த 90 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 50 லட்சம். வனத்துறையினரை கண்டதும், கடத்தலில் ஈடுபட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட தமிழக கூலித் தொழிலாளிகள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளனர். இவர்களில் வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேரை வன அதிகாரிகள் துரத்தி பிடித்தனர். தப்பி ஓடிய மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.