குஜராத்தில் நிலநடுக்கம்: மக்கள் பீதி; வீடுகளை விட்டு வெளியே ஓட்டம்

குஜராத்தில் நிலநடுக்கம்: மக்கள் பீதி; வீடுகளை விட்டு வெளியே ஓட்டம்
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தின் சில இடங்களில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட், பூஜ் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அகமதாபாத், பதான் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதுவும் ஏற்படவில்லை. எனினும் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

நிலநடுக்கத்தின் மையம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ் பகுதியில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in