Published : 14 Jun 2020 04:45 PM
Last Updated : 14 Jun 2020 04:45 PM

டெல்லியில் கரோனாவை கட்டுப்படுத்த 4 சிறப்பு அதிகாரிகள் நியமனம்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லியில் கரோனா தடுப்பு பணிளை தீவிரப்படுத்துவதற்காக பிற பகுதிகளில் பணிபுரியும் 4 முக்கிய அதிகாரிகளை டெல்லிக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

கரோனா பரவலை தடுக்க ஜூன் மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே 3-வது அதிகமாக கரோனா நோயாளிகள் இருப்பது டெல்லியில் தான்.

இதனால் டெல்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதனை மாநில அரசு திட்டமவட்டமாக மறுத்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புகார்எழுந்துள்ளது.

குறிப்பாக, டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எராளமான படுக்கைகள் காலியாக உள்ளபோதும், கரோனா நோயாளிகளை அலைக்கழிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் கரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கேட்பாரற்று கிடப்பதாகவும் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனையடுத்து டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாக இன்று கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து

டெல்லியில் கரோனா தடுப்பு பணிளை தீவிரப்படுத்துவதற்காக பிற பகுதிகளில் பணிபுரியும் 4 முக்கிய அதிகாரிகளை டெல்லிக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அந்தமானைச் சேர்ந்த அதிகாரிகள் அவனிஷ் குமார், மோனிகா பிரிய தர்ஷிணி, அருணாச்சல பிரதேசதத்தைச் சேர்ந்த கவரவ் சிங் ராவத், விக்ரம் சிங் மாலிக் ஆகிய 4 பேரும் உடனடியாக டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரோனா தடுப்பு பணியில் மத்திய உள்துறை அமைசகத்தின் நடவடிக்கைகளை இவர்கள் ஒருங்கிணைப்பார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x