

உலகை உலுக்கி வரும் நாவல் கரோனா வைரஸ் தொற்றுக்குரிய புதிய நோய்க்குறிகளாக திடீரென வாசனை, ருசி உணர்வுகள் அற்றுபோதல் என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கெனவே உள்ள கரோனா அறிகுறிகள் பட்டியலில் புதிதாகச் சேர்த்துள்ளது.
கடந்த ஞாயிறன்று இந்த புதிய அறிகுறிகளைச் சேர்ப்பதுப் பற்றி தேசியப் பணிக்குழு விவாதத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் மே மாதம் அமெரிக்காவில் உள்ள நோய்க்கட்டுப்பாட்டு மையம் கோவிட்-19 நோய் அறிகுறிகளில் திடீரென வாசனை, நாக்கு ருசி உணர்வுகள் இல்லாமல் போவதை சேர்த்தது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய கரோனா நோய் அறிகுறிகள் பட்டியல் இதோ:
காய்ச்சல்
இருமல்
களைப்பு
மூச்சுவிடுதலில் சிரமம்
இருமல் மூலம் சளி வெளிப்படுதல் (Expectoration)
தசைவலி (myalgia)
மூக்கில் சளிப்பிடித்து ஒழுகுதல் (Rhinorrhea),
தொண்டை வலி
வயிற்றுப்போக்கு
வாசனை மற்றும் ருசி உணர்வு திடீரென அற்றுப் போதல்.
ஆகியவை கரோனா நோய் அறிகுறிகளாக இருக்கலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.