

தாஜ்மாஹாலை சுற்றிப் பார்க்க வந்த ஜப்பான் நாட்டுப் பெண், தவறி விழுந்து தலையில் அடிப்பட்டதில் உயிரிழந்தார்.
ஜப்பானைச் சேர்ந்தவர் ஹச் யுடா (66) தனது நண்பர்களுடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த அவர் டெல்லியை சுற்றிப் பார்த்து வந்தார். பதேப்பூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை ஆகியவற்றை சுற்று பார்த்து விட்டு நேற்று மாலை தாஜ்மஹாலுக்கு தனது நண்பர்களுடன் அவர் சென்றார்.
தாஜ்மஹால் உள்ளே சுற்றிப் பார்த்து கொண்டிருக்கும் போது, படிக்கட்டில் இருந்து ஹிடிகோ நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார்.
உடனடியாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இரந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஜப்பான் தூதரகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும். அவை முடிந்தவுடன் யூடோவின் உடல் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கபடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.