

டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுனை தீவிரமாக அமல்படுத்த ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ெடல்லியைச் சேர்ந்த வழக்கறிஞ் அனிர்பன் மண்டல், அவரின் சக ஊழியர் பவன் குமார் ஆகியோர் வழக்கறிஞர் மிருதல் சக்ரவரத்தி மூலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன்மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவி்ல் அவர் தெரிவித்திருப்பதாவது:
டெல்லியில் வரும் ஜூன் மாத இறுதிக்குள் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை ஒரு லட்சமாகவும், ஜூலை நடப்பகுதியில் 2.5 லட்சமாகவும், ஜூலை இறுதியில் 5.5 லட்சமாகவும் அதிகரிக்கும் என்று டெல்லி அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த சூழலில் டெல்லியில் தீவிரமான லாக்டவுனை அமல்படுத்துவது குறித்து டெல்லி அரசு பரிசீலிக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ வல்லுநர்கள், சிறப்பு நிபுணர்கள் கொண்ட குழுவை டெல்லிஅரசு அமைத்து கரோனா பரவலைத் தடுக்க திட்ட வரைவை உருவாக்க உத்தரவிட வேண்டும்.
டெல்லியில் லாக்டவுன் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட நேரத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாக இருந்தது. ஆனால், மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதித்து, பொதுப்போக்குவரத்துக்கு அனுமதித்து , வழிபாட்டுத் தலங்கள், மால்கள், ரெஸ்டாரண்ட்கள், உணவகங்கள் திறந்தபின் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாள்தோறும் தீவிரமாக அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே டெல்லியில் உள்ளமருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஐசியு வார்டுகள், பரிசோதனைகள் போன்றவற்றில் பற்றாக்குறை நிலவுகிறது.. இதில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் போது, டெல்லியின் நிலையை கர்ப்பனைகூட செய்ய முடியவில்லை.
மாநிலத்தின் பொருளாதார நலனை மேம்படுத்தும் முயற்சியில் நடவடிக்கை எடுப்பதில் முன்னுரிமை அளிப்பதை விட மக்களின் சுகாதார நலனில், உடல்நலத்தில் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஆதலால் டெல்லியில் கரோனா பரவலைத் தடுக்க தீவிரமாக லாக்டவுனை அமல்படுத்த ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது