Published : 11 Jun 2020 10:32 am

Updated : 11 Jun 2020 10:42 am

 

Published : 11 Jun 2020 10:32 AM
Last Updated : 11 Jun 2020 10:42 AM

பிங்க் நிறத்தில் திடீரென நிறம் மாறிய ஏரி: மகாராஷ்டிரா மக்கள், வல்லுநர்கள் அதிர்ச்சி; என்ன காரணம்? குழப்பத்தில் ஆய்வாளர்கள் 

lonar-lake-colour-changes-to-pink-experts-locals-surprised
பிங்க் நிறத்தில் மாறிய லோனா ஏரியின் நீர் : படம் உதவி ட்விட்டர்

அவுரங்காபாத்


மகாராஷ்டிர மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் ஏரி திடீரென பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறத்தில் மாறியுள்ளது மக்களையும், வல்லுநர்களையும் பெரும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

மும்பையிலிருந்து 500 கி.மீ தொலைவிலும் புல்தானா மாவட்டத்திலும் அமைந்திருப்பது புகழ்பெற்ற லோனார் ஏரி. இந்த ஏரி கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விண்கல் பூமியைத் தாக்கியதால் ஏற்பட்ட பள்ளத்தால் உருவான ஏரி என்று நிலவியல்வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது

1823-ம் ஆண்டு ஆங்கிலேயர் அலெக்சாண்டர் என்பவரால் இந்த லோனார் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஸ்கந்த புராணம், பத்ம புராணம், அய்னி இ அக்பரி போன்ற நூல்களில் இந்த ஏரியைப் பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் சொல்லப்டுகிறது.

1.83 கி.மீ விட்டத்திலும் 150 மீட்டர் ஆழத்திலும் இந்த லோனார்ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் தன்மை குறித்து ஸ்மித்சோனியன் இன்ஸ்ட்யூஷன், அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வு மையம், சாஹர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிலவியல் ஆய்வு நிறுவனங்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் வழக்கமாக பச்சை நிறத்தில் காணப்படும்இந்த லோனார் ஏரி திடீரென பிங்க் நிறத்தில் கடந்த சில நாட்களாக மாறியுள்ளது அப்பகுதி மக்களை பெரும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து புல்தானா மாவட்ட ஆட்சியர் சுமந்த் ராவத் சந்திரபோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஏரி குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் “ உலக அதியசமாகத் லோனா ஏரி இ்ப்போது மாறிவிட்டது. பாசிகளால் பச்சை நிறத்தில் இருக்கும் ஏரி பி்ங்க் நிறத்துக்கு மாறிவிட்டது. மைக்ரோபயாலஜிஸ்ட்கள் இதற்கு காரணம் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மகாராஷ்டிரா சுற்றுலா கழகமும் ஏரியின் படத்தை பதிவிட்டு பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறமாக மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளது

இதுகுறித்து புவியியல் வல்லுநர்கள் சார்பில் கூறுகையில் “ லோனா ஏரியின் நிறம் மாறுவது புதிதல்ல. இதற்குமுன்பும் மாறியுள்ளது என்றாலும் பிங்க் நிறத்தில் முழுமையாக மாறியுள்ளது இதுதான் முதல்முறை. இந்த ஏரி உப்பு ஏரியாகும். இந்த நீரில் பிஹெச் அளவு 10.5 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த நீரில் இருக்கும் பாசிகள், மற்றும் உப்புத்தன்மையே நிறம் மாற காரணமாக இருக்கலாம்.

இந்த ஏரியில் ஒரு மீட்டருக்கு கீழ் ஆக்சிஜன் சப்ளை இருக்காது என்பதால் யாரும் குளிக்கமுடியாது. ஈரானில் உள்ள ஏரி போன்ற தோற்றமுடையது. எப்போதெல்லாம் நீர் சிவப்பு நிறத்தில் மாறுகிறோ அப்போது நீரில் உப்பின் அளவு அதிகரிக்கும்

பிங்க் நிறமாக மாறிய ஏரி.. ஏரியின் முந்தைய தோற்றம்

கடந்த சில ஆண்டுகளாக மழை குறைந்துவிட்டதால், லோனார் ஏரியில் நீரின் அளவும் குறைந்துவிட்டது. இதனால், மழைநீர் சேராததால் உப்பின் அளவு அதிகரித்து இதுபோன் பிங்க் நிறமாக மாறியிருக்கலாம். நீரில் உள்ள பாசிகள் இறந்து உப்பின் தன்மை அதிகரிப்பால் நிறம் மாறியிருக்கலாம் என நினைக்கிறோம்

இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். நி்ச்சயமாக மனிதர்களால் நிறத்தை மாற்ற முடியாது. இது நீரில் நடக்கும் உயிரியல் மாற்றம்தான். லாக்டவுன் காலத்தில் யாரும் ஏரியின் பக்கம் வந்திருக்க மாட்டார்கள் என்பதால், இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். இன்னும் சில வாரங்கள் செல்ல, செல்ல மேலும் மாற்றம் அதிகரிக்கும்

இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Locals surprisedLonar lake colour changes to pinkLonar lakeMaharashtra’s Lonar lakeSalinity and presence of algaeமகராஷ்டிராலோனார் ஏரிபி்ங்க் நிறத்தில் நீர்புவியியல் வல்லுநர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author