Published : 10 Jun 2020 09:21 PM
Last Updated : 10 Jun 2020 09:21 PM

கரோனா; வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு விதிமுறைகள்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்

புதுடெல்லி

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிவதற்கான விதிமுறைகளைத் துரிதப்படுத்துமாறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறைக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தமது துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கை வழிகாட்டுதல்களை துறை துரிதப்படுத்துமாறு அவர் அறிவுரை வழங்கினார். முன்னுரிமை அடிப்படையில், அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றுடன் தேவையான ஆலோசனைகளை நடத்தி முடிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

வீட்டிலிருந்து பணிபுரியும் விதிமுறைகளை உரிய நேரத்தில் வெளியிடுவது, மத்திய செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பிரதமரின் சமூக இடைவெளி, ‘தோ கஸ் தூரி’ என்ற அழைப்பைப் பின்பற்ற பெரிதும் உதவும்.

2020 ஜூன் 12-ம்தேதி வடகிழக்கு மாநிலங்களுக்கான இ-அலுவலகக் கருத்தரங்கில் ஜித்தேந்திர சிங் உரையாற்றுகிறார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் டிஜிடல் செயலகங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இது நடத்தப்படவுள்ளது. இணையதள வழிமுறையில் நடத்தப்படவுள்ள இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் குறித்த கூட்டத்தில் இன்று ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார். 75 மத்திய அமைச்சகங்கள், துறைகளின் இ-அலுவலகங்களின் முன்னேற்றம், மத்திய செயலகத்தின் டிஜிட்டல் வடிவை உருவாக்க வகை செய்துள்ளது.

கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரிவதை சாத்தியமாக்க இது உறுதி செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் இ-அலுவலக நடைமுறையை அமல்படுத்துவதன் மூலம், கால வரம்பிற்குள், மாநில செயலகங்கள் காகிதமற்ற நிர்வாகத்திற்கு மாற உதவும். இது நடைமுறைக்கு வரும் போது, மெய்நிகர் தனியார் கட்டமைப்புகள், டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ்கள் ஆகியற்றுடன் செயல்பட அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கப்படும். இதன்மூலம் ஆள் தொடர்பு குறைவான நிர்வாகத்தை செயல்படுத்த இது உதவும்.

மார்ச் மாதம் 30-ம்தேதி முதல் ஜூன் 9-ஆம்தேதி வரை, கொவிட்-19 தொடர்பான ஒரு லட்சம் குறைபாடுளுக்கு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை தீர்வு கண்டுள்ளது. தரமான குறை தீர்வை உறுதிசெய்ய, நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வுத் துறை, அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய பின்னூட்டத் தகவல் மையங்களை 11 மொழிகளில், வரும் 15-ம்தேதி பிஎஸ்என்எல் மூலம் செயல்படுத்தவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x