கரோனா வைரஸ்: குணமடைந்தோர் எண்ணிக்கை சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையை விட அதிகம்

கரோனா வைரஸ்: குணமடைந்தோர் எண்ணிக்கை சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையை விட அதிகம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் நல்ல செய்தியாக முதல் முறையாக நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 632 ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,205 ஆக உள்ளது.

ஆகவே, “48.99% நோயாளிகள் இதுவரை குணமடைந்துள்ளனர்” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் நீரஜ் குப்தா, கூறும்போது, ‘இந்தத் தரவு அதிகம் பேர் குணமடைகின்றனர் என்று தெரிவிக்கிறது. அதாவது 80% கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மிதமான பாதிப்பு உள்ளதையே காட்டுகிறது. எனவே இந்தத் தரவு கரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு உண்மையில் தெம்பு அளிப்பதாகவே இருக்கும். அதற்காக சமூக விலகல், மாஸ்க் அணிவதிலிருந்து பின் வாங்க வேண்டாம் என்பதே அறிவுரை’ என்றார்.

ஐசிஎம்ஆர் தகவலின்படி 50 லட்சத்து 61 ஆயிரத்து 332 சாம்பிள்கள் புதன் கிழமை காலை தரவுகள் வரை சோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,45,216 சாம்பிள்கள் 24 சோதிக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in