Published : 10 Jun 2020 06:27 AM
Last Updated : 10 Jun 2020 06:27 AM

கரோனா ஊரடங்கு எதிரொலி; வாகன பதிவு, எப்சி-க்கான அவகாசம் செப். 30 வரை நீட்டிப்பு- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எப்.சி.) பெறுவது உள்ளிட்டவற் றுக்கான கால அவகாசம் செப் டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப் படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பல்வேறு துறை களிலும் சலுகைகள் அறிவிக்கப் பட்டன. அதன்படி, பிப்ரவரியுடன் காலக்கெடு முடிவடையவிருந்த வாகனங்களுக்கான தகுதிச் சான்று, ஓட்டுநர் லைசென்ஸ், பர்மிட் உள் ளிட்டவற்றை புதுப்பிக்க மத்திய தரைவழி போக்குவரத்து அமைச் சகம் அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் மே 31 வரை வழங்கப்பட்டு, பின்னர் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு படிப்படி யாக விலக்கிக் கொள்ளப்பட்டு வரு கிறது. அதே நேரத்தில் அரசு அலு வலங்கள் குறைந்த ஊழியர்களு டனே செயல்பட்டு வருகின்றன. இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிகளை முழுமையாக மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து வாகனங்கள் சார்ந்த பல்வேறு ஆவ ணங்களை புதுப்பிப்பதற்கான அவகாசம் மேலும் நீட்டிக்கப்படு வதாக மத்திய தரைவழி போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வாகனங்களுக்கான தகுதிச் சான்று (அனைத்து பிரிவுகளும்), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத் தும் புதுப்பிப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப் படுகிறது.

இந்த அறிவிப்பின் மூலம், பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து காலக்கெடு முடிவடையும் அனைத்து ஆவணங்களையும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் புதுப் பித்துக் கொள்ள வழிவகை ஏற்பட் டுள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் அறிவுறுத்தல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களுக்கு அனுப்பப்படும் என் றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், தற்போது நிலைமை சீரடையாததை கருத்தில்கொண்டு அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிட்னெஸ் சான்று பெறுவது மற்றும் பர்மிட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு அபராத தொகை செலுத்தாமல் புதுப்பித்துக் கொள்ள முடியும். அசாதாரணமான சூழலில் இதுபோன்ற விதி விலக்குகள் அளிக்க மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி வகை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x