நாடுமுழுவதும் நடந்த கரோனா பரிசோதனை எவ்வளவு?- முக்கிய தகவல்கள்

நாடுமுழுவதும் நடந்த கரோனா பரிசோதனை எவ்வளவு?- முக்கிய தகவல்கள்
Updated on
1 min read

கரோனா தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

* இதுவரை, 12.55 கோடி பேருக்கும் அதிகமாக இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

* 2020 ஜூன் 9 வரை கரோனாவுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட 958 மருத்துவமனைகள்

* 1,67,883 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள்,
* 10,748 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 46,635 பிராணவாயு ஆதரவுடன் கூடிய படுக்கைகள்

* 1,33,037 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 21,614 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள், 73,469 பிராணவாயு ஆதரவுடன் கூடிய படுக்கைகள்

* 2,313 சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன

* கரோனா தொற்றை முறியடிக்க, 7,10,642 படுக்கைகளுடன் கூடிய 7,525 கோவிட் சிகிச்சை மையங்கள்

* மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய நிறுவனங்களுக்கு 128.48 லட்சம் என்-95 முகக்கவசங்கள்,

104.74 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு கூடுதலாக, 60,848 சுவாசக் கருவிகளை வாங்குவதற்கும் கொள்முதல் ஆணை கொடுத்துள்ளது

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ICMR) பரிசோதனைத் திறன் 553 அரசு மற்றும் 231 தனியார் பரிசோதனைக் கூடங்களுடன் ( மொத்தம் 784 ஆய்வகங்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை, 49 லட்சத்துக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

* கடந்த 24 மணி நேரத்தில், 1,41,682 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை, 1,29,214 பேர் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

* கடந்த 24 மணி நேரத்தில், 4,785 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது, மொத்த குணமான விகிதத்தை 48.47 சதவீதமாகக் உயர்த்தி சென்றுள்ளது.

* தற்போதைக்கு, பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,29,917.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in