Last Updated : 09 Jun, 2020 05:34 PM

 

Published : 09 Jun 2020 05:34 PM
Last Updated : 09 Jun 2020 05:34 PM

கேரளா மலப்புரத்தில் காயமடைந்த யானை இறந்தது

அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதற்கான கண்டனங்களே இன்னும் ஓய்ந்தபாடில்லை என்ற நிலையில் கேரள மலப்புரத்தில் இன்னொரு யானை காயம் காரணமாக மரணமடைந்துள்ளது.

வடக்கு நீலாம்பூர் வனச்சரகப் பகுதியில் திங்களன்று இந்தத் துயரச் சம்பவம் நடந்தது. வனவிலங்கு மருத்துவர்கள் போராடியும் இன்ஹ யானையை காப்பாற்ற முடியவில்லை.

கடந்த 5 நாட்களாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனாலும் யானை உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “உள்ளூர் மக்கள் யானை காயமடைந்த விவரத்தைத் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்தோம், காயங்களைப் பார்க்கும் போது பிற யானைகளுடன் ஏற்பட்ட சண்டையின் போது ஏற்பட்ட காயமாகத் தெரிகிறது. மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது” என்றார்.

வயநாட்டிலிருந்து சிறப்பு மருத்துவக் குழுவும் வரவழைக்கப்பட்டது, ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து இறந்த யானையின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு மட்டும் 50 யானைகள் மரணமடைந்துள்ளன. 3 யானைகள் இயற்கை மரணம் அல்ல, 47 இயற்கை மரணம் எய்தியவை. கடந்த ஆண்டு 120 யானைகள் இறந்துள்ளன, இதில் 10 யானைகல் இயற்கைக்கு விரோதமாக மரணித்தன 110 யானைகள் இயற்கை மரணம் எய்தின. இயற்கைக்கு விரோதமான மரணம் என்றால் வேட்டையாடப்படுதல், மின்சாரம் பாய்ந்து சாதல், வாகனங்களில் மோதி இறத்தல் ஆகியவை அடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x