Last Updated : 09 Jun, 2020 02:24 PM

 

Published : 09 Jun 2020 02:24 PM
Last Updated : 09 Jun 2020 02:24 PM

ஜூலை 31ம் தேதிவாக்கில் டெல்லியில் 5.5 லட்சம் பேருக்கு கரோனா தொற்று இருக்கும்: துணை முதல்வர் சிசோடியா

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின் படி டெல்லியில் சமூக பரவல் இல்லை என்று கூறப்பட்டாலும் ஜூலை 31ம் தேதி வாக்கில் தலைநகர் டெல்லியில் சுமார் 5.5 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

ஜூலை இறுதிக்குள் 80,000 படுக்கைகள் டெல்லியில் தேவைப்படும் என்று மனீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை துணை நிலை ஆளுநர் பைஜல் தலைமையேற்று நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் டெல்லியில் சமூகப் பரவல் இல்லை என்று கூறப்பட்டது. மேலும் டெல்லி மக்களுக்கே டெல்லி மருத்துவமனைகள் என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் முடிவை நிராகரித்ததை மீண்டும் பரிசீலிக்கப்பட மாட்டோம் என்று துணை நிலை ஆளுநர் கூறினார்.

இதற்கிடையே இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக ஏறக்குறைய பத்தாயிரம் பேரை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 9 ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 266 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவில் சிகிச்சைபெற்று வருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 917 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 214 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணக்கை 7ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த 266 உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவி்ல் 109 பேர், டெல்லியில் 62 பேர், குஜராத்தி்ல் 31, தமிழகத்தில் 17, ஹரியாணாவில் 11, மேற்கு வங்கத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 8 பேர், ராஜஸ்தானில் 6 பேர், ஜம்மு காஷ்மீரில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர், பஞ்சாப், மத்தியப்பிரதேசத்தில் தலா இருவர், கேரளா, பிஹாரில் தலா ஒருவர்உயிரிழந்தனர்

டெல்லியில் உயிரிழப்பு 823 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x