Last Updated : 09 Jun, 2020 10:01 AM

 

Published : 09 Jun 2020 10:01 AM
Last Updated : 09 Jun 2020 10:01 AM

வீட்டுக்கு வீடு சர்வே செய்து பரிசோதனை நடத்துங்கள்: சென்னை உள்பட நாடுமுழுவதும் 38 மாவட்டங்களுக்கு மத்தியஅரசு அறிவுறுத்தல்

கோப்புப்படம்

புதுடெல்லி

நாடுமுழுதும் 10 மாநிலங்களில் இருக்கும் சென்னை உள்பட 38 மாவட்டங்களில் வீ்ட்டுக்கு வீடு சர்வே செய்து, பரிசோதனையை தீவிரப்படுத்துங்கள், கண்காணிப்பை அதிகப்படுத்தினால்தால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

10 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களில் இருக்கும் 45 நகராட்சி, மாநகராட்சிகளில்தான் நாட்டில் உள்ள கரோனா எண்ணிக்கையில் 75 சதவீதம் பேர் இருக்கிறார்கள் என்பதால் இந்த அறிவுரை அந்தந்த நகராட்சி, மாநகராட்சி ஆணையர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கப்பட்டது

இந்தியாவில் தொடர்ந்து 2 நாட்களாக கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டோர் 2.56 லட்சமாகவும், 7 ஆயிரத்தும் மேல் உயிரிழந்ததையடுத்து மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மத்திய உள்துறை செயலாளர் ப்ரீத்தி சுதான், நேற்று சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரிகள், 38 மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் ஆகியோருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்


இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் “ மகாராஷ்டிரா, தெலங்கானா, தமிழகம், ராஜஸ்தான் , ஹரியாணா, குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் 38 மாவட்டங்களில்தான் கரோனா வைரஸ் நோயாளிகள் அதிகமாக உருவாகிறார்கள்

லாக்டவுனை தளர்த்தியும், கட்டுப்பாடுகளை நீக்கிய நிலையி்ல் வரும் நாட்களில் இந்த 38 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், மாவட்ட அளவில் எதிர்கால திட்டத்தை உருவாக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த 38 மாவட்டங்களில் உள்ள 45 நகராட்சி, மாநகராட்சிகளில் இருந்துதான் நாட்டின் 75 சதவீத கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள்.

இந்த 38 மாவட்டங்களிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாவது அதிகரித்து வருகிறது, உயிரிழப்பும் அதிகரித்து வருவதும் கவலை தரும் விஷயமாக இருக்கிறது என்று மத்தியஉள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

பரிசோதனை முடிவுகள் குறித்த நேரத்துக்குள் கிடைக்குமாறு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், முன்கூட்டியே கரோனா நோயாளிகளுக்கு கண்டுபிடித்து, அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மக்கள் அடர்த்தி மிகுந்த நகராட்சிகள், மாநகராட்சிகளில் கரோனா பரவல் இருப்பது குறித்தும், வீட்டுக்கு வீடு ஆய்வு செய்து, பரிசோதனை செய்யவும் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிதளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த 38 மாவட்டங்களில் கரோனா நோயாளிகள் இறப்புவீதத்தைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் என்ன, அதிகமான பாதிப்புக்கு உள்ளாகும் பிரிவினரை எவ்வாறு பிரித்து சிகிச்சையளித்தல், முதியோர், நீண்டகால நோய் உள்ளவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சையளித்தல் போன்றவை விவாதிக்கப்பட்டது. குறிப்பாக கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதன் மூலம் இறப்பைக் குறைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

கரோனா அறிகுறிகள் தீவிரமாகும் வரை ஒரு நோயாளியை காத்திருக்க வைக்காமல் உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சையளித்தல், தீவிரமாகக் கண்காணித்தல், போதுமான அளவு பரிசோதனை செய்தல் போன்றவைமூலம் கரோனா நோயாளிகள் உருவாவதைக் குறைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x