Published : 09 Jun 2020 07:12 AM
Last Updated : 09 Jun 2020 07:12 AM

கர்நாடகாவில் 75 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் திறப்பு

கர்நாடகாவில் 75 நாட்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் நேற்று திறக்கப்பட்டன.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. கடந்த மே 4-ம் தேதி முதல் கர்நாடகாவில் ஊரடங்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் கோயில், ஆலயம், மசூதி, விஹார் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள், அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவை நேற்று திறக்கப்பட்டன. முன்னதாக வழிபாட்டு தலங்களில் கரோனா வைரஸ் பரவாத வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. நேற்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதும் முக கவசம் அணிந்து வந்த‌ பக்தர்கள் வாசலில் கைகழுவ அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை ஆராயப்பட்ட பின்னரே, தனிநபர் இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒருவர் பின் ஒருவராக உள்ளே அனுப்பப்பட்டனர். உணவு விடுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் 4 அடி முதல் 6 அடி இடைவெளிவிட்டு இருக்கைகள் போடப்பட்டன. இதேபோல மைசூரு அரண்மனை, கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் தனிநபர் இடைவெளி பின்பற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x