

பிரதமர் மோடி மற்றும் முக்கிய விவிஐப்பிக்கள் பயன்பாட்டுக்காக அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட போயிங் நிறுவனத்தின் பி7777 வகை இரு விமானங்கள் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஏர் இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்ட மிக உயர்ந்த பதவியில் இருபவர்கள் பயணிப்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசால் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது.
இந்த இரு விமானங்கள் ஜூலை மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோன வைரஸ் தொற்று காரணமாக விமானங்கள் ஒப்படைப்பதற்கு ஒருமாதம் தாதமாக செப்டம்பரில் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவி்ந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட உயர் பதவியில் இருப்போர் தற்போது வெளிநாடுகளுக்குச் செல்ல ஏர் இந்தியாவின் பி747 ஏர்இந்திய ஒன் வகை விமானங்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இ்ந்த விமானங்கள் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய விவிஐபிக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி வர்தத்கப் பயன்பாட்டுக்கும் அனுப்பப்டுகிறது. ஆனால் செப்டம்பர் வரும் இரு சிறப்பு விமானங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட விவிஐபிக்கள் மட்டுமே பயணிப்பார்கள்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை மத்தியஅரசு விற்பனை செய்யும் மும்முரத்தில் இருந்து வருகிறது. அந்த பங்குகள் விற்பனையானால், ஏர் இ்ந்தியா விமானங்களை பயன்படுத்த முடியாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பரில் இந்தியா வரும் இரு விமானங்களையும் ஏர் இந்தியா விமானிகள் இயக்கப்போவதில்லை. அந்த விமானங்களை இந்திய விமானப்படையின் விமானப்படை வீரரர்கள்தான் இயக்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் அந்த இரு விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் இந்தியா எஞ்சனீயரிங் சர்வீஸ் லிமிட்(ஏஐஇஎஸ்எல்) நிறுவனம் பராமரிக்கும்.
இந்த இரு விமானங்களிலும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களான லார்ஜ் ஏர்கிராப்ட் இன்ப்ராரெட் கவுன்டர்மெசர்ஸ்(எல்ஏஐஆர்சிஎம்), செல்ப் புரோடெக்ஸன் சூட்ஸ்(எஸ்பிஎஸ்)ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு பாதுகாப்புதொழில்நுட்பங்களும் 19கோடி டாலர் மதிப்பில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ பிரதமர் மற்றும் விவிஐபிக்களுக்காக வாங்கப்பட்டுள்ள இரு அதிநவீன போயிங் விமானங்களும் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, செப்டம்பரில் இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்