

விலங்குகளுக்கு எதிரான கொடுமை அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு சம்பவமாக பைக்கில் இரண்டு நபர்கள் நாயை தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் வீடியோவாக வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக அவுரங்காபாத் போலீஸார் கூறும்போது, “நாய் ஒன்றை வண்டியில் தரதரவென்று இழுத்து செல்லும் காட்சி வீடியோவில் வெளியானதையடுத்து 2 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாயின் கழுத்தில் சங்கிலியால் கட்டி பைக்கில் 1 கிமீ வரை இழுத்துச் சென்றுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இதேபோல் நாய் ஒன்றை சிலர் அடித்துக் கொன்ற காட்சியும் வீடியோவாக வெளியாகி வைரலானது.
இந்நிலையில் போலீஸ் அதிகாரி அதுல் ஷர்மா கூறும்போது, “இது சர்ர போலீஸ் சரக எல்லைக்குள் நடந்துள்ளது. இதைச் செய்தவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்து வருகிறோம். உறுதியானவுடன் நிச்சயம் இந்த நபர்கள் மீது நடவடிக்கை பாயும்” என்றார்.
கேரளாவில் பாலக்காட்டில் கருவுற்ற பெண் யானை ஒன்று அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்டிருந்த வெடி மூலம் இறந்தது நாட்டையே உலுக்கி விட்ட நிலையில் இமாச்சலத்தில் பசுமாடு ஒன்றும் கொல்லப்பட்டது குறித்து கடும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் நாய் ஒன்றை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவவும், நாய் அடித்து கொல்லப்பட்ட சம்பவமும் சர்ச்சையாகியுள்ளது.