டெல்லியில் இம்மாத இறுதிக்குள் கரோனாவால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்; 15 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்க: மருத்துவக் குழு கேஜ்ரிவால் அரசுக்கு பரிந்துரை.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்
Updated on
2 min read


டெல்லியில் இந்த மாத இறுதிக்குள் கரோனா வைரஸால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கூடுதலாக 15 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்ய வேண்டும் என்று டெல்லி அரசால் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட மருத்துவக்குழு கணித்துள்ளது.

டெல்லியில் கரோனா வைரஸின் தாக்கம் 4-வது லாக்டவுன் தளர்வுகளுக்குப்பின் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மே 28-ம் தேதியிலிருந்து கடந்த 4ம் தேதி வரை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான கட்டுப்ாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுவிட்டதால் மக்கள் எந்தவிதமான தடையும் இன்றி உலாவி வருகின்றனர்.

அதிகபட்சமாக கடந்த 3-ம் தேதி 1,513 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் கடந்த மே மாதத்தில் நாள்தோறும் 5 என்ற எண்ணிக்கைக்குள் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களாக நாள்தோறும் 30-க்கு குறைவில்லாமல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 10 நாட்களில் டெல்லியில் உயிரிழப்பு 700-க்கும் மேலாக அதிகரித்தது.

அதுமட்டுமல்லாமல் சமூக பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 11 நாட்களாக படிப்படியாக் குறைந்து 48 சதவீத்துக்கு மேல் இருந்த நிலையில் 39 சதவீதத்துக்கும் கீழ் வந்துவிட்டது.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவலை எவ்வாறு சமாளிப்பது என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க கடந்த மே 2-ம் தேதி 5 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழுவை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைத்தார். அந்த குழுவின் தலைவர் மருத்துவர் மகேஷ் வர்மா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் “ டெல்லி, சென்னை, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் கரோனா வைரஸ் பரவும் போக்கு குறித்து ஆய்வு செய்தோம். எங்களின் கணக்கின்படி டெல்லியில் இம்மாத இறுதிக்குள் கரோனா வைரஸால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிறோம்.

ஆதலால், கூடுதலாக 15 ஆயிரம் படுக்கைகளை தாயார் செய்து கொள்ளுமாறுஅரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். எந்த நோயாளியும் பாதிக்கப்பட நாங்கள் விரும்பவில்லை. கரோனா வைரஸை எதிர்த்து போராட வேண்டும் என்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக இதைக் கூறுகிறோம்.

இந்த 15 ஆயிரம் படுக்கைகள் என்பது தங்கும் விடுதிகள், பள்ளிகள், கல்லூரிகள்,விளையாட்டுக்கூடங்கள் எதில் வேண்டுமானாலும் அமைக்கலாம். அதோடு ஆக்ஸிஜன் அதிகமான தேவை இருக்கும் என்பதால் அதையும் குறிப்பிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்

இந்த குழுவில் உள்ள மற்றொரு மருத்துவர் கூறுகையில் “ டெல்லியில் கரோனா எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 15 நாட்களாக இருக்கிறது. எங்களி்ன் கணக்கிப்பின்படி மேலும் பாதிப்பு அதிகரிக்கும். 25 சதவீத நோயாளிகளுக்கு மருத்துவமனை உதவி தேவைப்படும், இதில் 5 சதவீதம் நோயாளிகளுக்கு அதாவது ஹைபோக்ஸியா நிலைக்கு செல்வார்கள்.

ஹைபோக்ஸியா என்பது ரத்தத்தில் பிரணவாயு குறைந்துவிடும் என்பதால், ெவன்டிலேட்டர் உதவி தேவைப்படும் ஆதலால், அதிகமான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இருப்பு வைக்க டெல்லி அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம். ஜூலை 15-ம் தேதிக்குள் 45 ஆயிரம் படுக்கைகள் டெல்லி அரசு ஏற்பாடு செய்ய வேண்டியது இருக்கும்.” எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in