

தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்கள் முதலில் நாம் நன்றாக இருக்கிறோம், சமூகத்தில் கரோனா கட்டுக்குள் இருக்கிறது என்ற மாயையலிருந்து முதலில் வெளியே வாருங்கள். டெல்லியில் சமூகப் பரவல் வந்துவிட்டது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் என்.கே. கங்குலி எச்சரிக்கை விடுத்துள்ளார்
டெல்லியில் கரோனா வைரஸின் தாக்கம் 4-வது லாக்டவுன் தளர்வுகளுக்குப்பின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மே 28-ம் தேதியிலிருந்து கடந்த 4ம் தேதி வரை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் அதிகபட்சமாக கடந்த 3-ம் தேதி 1513 பேர் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் கடந்த மே மாதத்தில் நாள்தோறும் 5 என்ற எண்ணிக்கைக்குள் இருந்த நிலையில் கடந்த 10 நாட்களாக நாள்தோறும் 30-க்கு குறைவில்லாமல் இருந்து வருகிறது. இதனால் கடந்த 10 நாட்களில் டெல்லியில் உயிரிழப்பு 700-க்கும் மேலாக அதிகரித்தது.
அதுமட்டுமல்லாமல் சமூக பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 11 நாட்களாக படிப்படியாக் குறைந்து 48 சதவீத்துக்கு மேல் இருந்த நிலையில் 39 சதவீதத்துக்கும் கீழ் வந்துவிட்டது.
டெல்லியில் கரோனா கட்டுக்குள் இருக்கிறதா அல்லது சமூகப்பரவலுக்கு வந்துவிட்டதா என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் என்.கே. கங்குலியிடம் நிருபர் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் பதில்அளித்ததாவது:
டெல்லி மக்கள் அனைவரும் டெல்லியில் கரோனா தொற்றுகட்டுக்குள் இருக்கிறது, நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற மாயையிலிருந்து முதலில்வெளியே வர வேண்டும்.
நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான கரோனா நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன, குணமடைவோர் சதவீதம் குறைந்து வருவது அனைத்தும் டெல்லி சமூக பரவலுக்கு வந்துவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது. அதில் சந்தேகமில்லை. டெல்லி சமூக பரவல் கட்டத்துக்கு வந்துவிட்டது என்று சொல்வதில் தவறேதும் இல்லை.
டெல்லி, மும்பை, அகமதாபாத் போன்ற நகரங்களில் கூட நாள்தோறும் அதிகமான கரோனா நோயாளிகள் உருவாகிறார்கள், அந்த நகரங்களும் சமூகப்பரவலில்தான் இருக்கின்றன.இல்லாவிட்டால் நாள்தோறும் சில நூறு கரோனா நோயாளிகளைவைத்து எவ்வாறு கணிக்க முடியும்
மத்திய அரசு பொருளதார நடவடிக்கைகளுக்காக தளர்வுகளை அறிவித்துள்ளன. ஓர் அரசு பொருளாதாரத்தை இயல்புப்பாதைக்கு கொண்டுவர கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியது கடமை. எத்தனை நாட்களுக்கு லாக்டவுனில் பொருளாதாரத்தை வைத்திருக்க முடியும்.
மக்கள்தான் தங்கள் உடல்நலத்தை கவனத்துக் கொண்டு, கரோனாவுக்கு எதிராகவும் போராடி, வாழ்க்கையையும் நடத்த வேண்டும். மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, கரோனா தொற்றுக்கு ஆளாகாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். விரைவில் கரோனா எண்ணிக்கை குறைந்துவிடும்.
டெல்லியில் அறிகுறி இல்லாத ஏராளமானோர் கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள், ஆதலால் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதிப்பது சாத்தியமில்லை. யாருக்கெல்லாம் அறிகுறி இருந்து மோசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே சிகிச்சையளித்தால் போதும்” எனத் தெரிவித்தார்
மத்திய அரசு அமைத்த அதிகாரமிக்க குழுவின் குரூப்1 தலைவர் வினோத் பால் கூறுகையில் “ ெடல்லியின் சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் உண்மையான நிலவரம் தெரியவரும்” எனத் தெரிவித்தார்