பிரதமர் மோடியை அகற்றுமாறு பேசவில்லை- மேற்கு வங்க முதல்வர் மம்தா விளக்கம்

பிரதமர் மோடியை அகற்றுமாறு பேசவில்லை- மேற்கு வங்க முதல்வர் மம்தா விளக்கம்
Updated on
1 min read

கொல்கத்தா: உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா வைரஸ் மட்டுமல்லாது உம்பன் புயலாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில எதிர்க்கட்சிகள் எங்களை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக எங்களை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்தான் கூறி வருகின்றன. இதற்கு பதில் கூறினேனே தவிர, பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து அகற்ற வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை.

மாநிலத்தில் இக்கட்டான சூழல் நிலவும் நேரத்தில் பொதுமக்களை பாதுகாக்க நாங்கள் போராடி வருகிறோம். இந்தத் தருணத்தில் எங்களை நீக்க வேண்டும் என்று சில கட்சிகள் கூறுவது வேதனையளிக்கிறது. மக்களை காப்பாற்ற நாங்கள் களத்தில் இறங்கி போராடுகிறோம். எங்களை குறை சொல்பவர்கள் 3 மாதங்களாக எங்கே போனார்கள்? இக்கட்டான நிலையில் அரசியல் செய்கின்ற நேரமா இது? கரோனா வைரஸ் மற்றும் சதிக்கு எதிராக மேற்கு வங்கம் வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in