Published : 06 Jun 2020 13:52 pm

Updated : 06 Jun 2020 13:52 pm

 

Published : 06 Jun 2020 01:52 PM
Last Updated : 06 Jun 2020 01:52 PM

கேரளாவில் முன்னாள் கால்பந்து வீரர் கரோனா வைரஸுக்கு மரணம்: 3 வயது, 3 மாத பேரப்பிள்ளைகள் உட்பட குடும்பத்தினருக்கும் கரோனா பாசிட்டிவ்

former-footballer-dies-of-covid-19-in-kerala-state-s-toll-now-15

கேரளாவில் கரோனா வைரஸுக்கு முன்னாள் கால்பந்து வீரர் பலியானார், இதனுடன் கேரள கரோனா பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

61 வயதான் ஹம்சா கோயா என்ற இந்தக் கால்பந்து வீரர் சந்தோஷ் ட்ராபி கால்பந்து தொடருக்காக மகாராஷ்ட்ரா அணியில் ஆடினார். இவர் மும்பையிலிருந்து மே 21ம் தேதி கேரளா திரும்பினார்.

மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவமனையில் ஹம்சா கோயா சிகிச்சைப் பெற்று வந்தார். இவருக்கு நிமோனியா மற்றும் தீவிர சுவாசக்குழாய் பிரச்சினை இருந்தது.

இந்நிலையில் நேற்று 5ம் தேதி இவரது உடல் நிலை மோசமாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் நிலை இந்தச் சிகிச்சைக்கு சரியாக வினையாற்றவில்லை, சிகிச்சையை உடல் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்குச் சென்றது.

இதனையடுத்து அவர் சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு இறந்து போனார்.

இவரது மனைவி, மகள், மருமகள், 3 வயது மற்றும் 3 மாத பேரக்குழந்தைகள் ஆகியோருக்கும் கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Former Footballer dies of COVID-19 in Kerala State's toll now 15கேரளாவில் முன்னாள் கால்பந்து வீரர் கரோனா வைரஸுக்கு மரணம்: 3 வயது 3 மாத பேரப்பிள்ளைகள் உட்பட குடும்பத்தினருக்கும் கரோனா பாசிட்டிவ்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்இந்தியாகேரளாCORONA INDIAONE MINUTE NEWS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author