

தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்த மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது
மனுதாரர் அபிஷேக் கோயங்கா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ கரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகள் மூலம் தனிமைப்படுத்தும் இடங்கள், சிகிச்சையை கட்டண அடிப்படையில் தொடங்க வேண்டும்.
ஆனால், தற்போது அந்த வாய்ப்பு இருந்தும் நோயாளிகளுக்கு அல்ல. ஆதலால், கரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைஅளிக்க கட்டண நிர்ணயம் செய்ய மத்தியஅரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் தெரிவித்திருந்தார்
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மருத்துவமனை கூட்டமைப்பு தரப்பில் ஹரிஸ் சால்வே, முகுல் ரோகத்கியும், மத்திய அரசு தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகினர்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன், “ இந்த பொதுநலன் மனுவில் கேட்டுள்ளபடி கரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய கட்டணத்தை மத்தியஅரசு நிர்ணயிப்பது தொடர்பாக பதிலை அடுத்த 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
கரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் சூழலில் தொண்டு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளுக்கு கண்டிப்பாக இலவசமாக சிகிச்சையளிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளும் தங்களின் பதிலை விரிவாக இருவாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், மத்திய அரசும் விரிவாக பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்