

பூமியின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உலக சுற்றுச்சூழல் நாளான இன்று, பூமியின் வளமான பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க உறுதியேற்போம் என்பதை மீண்டும் வலியுறுத்துவோம்.
இந்தப் பூமியை தாவரங்களுடனும் விலங்கினங்களுடனும் நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம், அவற்றைப் பாதுகாக்க நம்மால் இயன்ற அனைத்தையும் ஒன்று கூடி செய்வோம். வரும் தலைமுறையினருக்கு சிறப்பான பூமியை நாம் விட்டுச் செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.