Last Updated : 05 Jun, 2020 11:35 AM

 

Published : 05 Jun 2020 11:35 AM
Last Updated : 05 Jun 2020 11:35 AM

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,851 பேருக்கு கரோனா; உயிரிழப்பு 6,348 ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 461 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 960 ஆகவும் அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 48.27 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த 273 உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவில் 123 பேர், டெல்லியில் 44 பேர், குஜராத்தில் 33 பேர், உத்தரப் பிரதேசத்தில் 16 பேர், தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் 10 பேர், தெலங்கானா, மத்தியப் பிரதேசத்தில் தலா 6 பேர், கர்நாடகா, பிஹார், ராஜஸ்தானில் தலா 4 பேர், ஆந்திரா, கேரளாவில் தலா 3 பேர், உத்தரகாண்டில் 2 பேர், ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, ஜார்க்கண்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,710 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,155 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 377ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 650 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 213 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 105 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 245 ஆகவும், ஆந்திராவில் 71 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 57 பேரும், பஞ்சாப்பில் 47 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 35 பேரும், ஹரியாணாவில் 24 பேரும், பிஹாரில் 29 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளாவில் 14 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 5 பேரும், ஜார்க்கண்டில் 6 பேரும், உத்தரகாண்டில் 10 பேரும், அசாமில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,793 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 32,681 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 14,902 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 25,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,898 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 18,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 12,667 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 9,862 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 8,872 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 9,237 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 6,876 பேரும், ஆந்திராவில் 4,223 பேரும், பஞ்சாப்பில் 2,415 பேரும், தெலங்கானாவில் 3,147 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 3,142 பேர், கர்நாடகாவில் 4,320 பேர், ஹரியாணாவில் 3,281 பேர், பிஹாரில் 4,493 பேர், கேரளாவில் 1,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 690 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 2,478 பேர், சண்டிகரில் 301 பேர் , ஜார்க்கண்டில் 793 பேர், திரிபுராவில் 644 பேர், அசாமில் 1,988 பேர், உத்தரகாண்டில் 1,153 பேர், சத்தீஸ்கரில் 756 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 383 பேர், லடாக்கில் 90 பேர், நாகாலாந்தில் 90 பேர், மேகாலயாவில் 33 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 25 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 17 பேர், சிக்கிமில் இருவர், மணிப்பூரில் 124 பேர், கோவாவில் 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 42 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x