Last Updated : 05 Jun, 2020 07:52 AM

 

Published : 05 Jun 2020 07:52 AM
Last Updated : 05 Jun 2020 07:52 AM

முகாம்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தமிழர்களிடம் நலம் விசாரிக்கும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்

கடந்த மார்ச் 1 முதல் 23 வரை டெல்லியின் நிஜாமுதீனில் தப்லீக்-ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுமார் 12,000 பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருந்தனர். கரோனா வைரஸ் பரவலால் அமலான ஊரடங்கால் இவர்களில் சுமார் 600 பேர் மர்கஸில் சிக்கினர். இவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன் முடிவுகளுக்கு ஏற்பசிலர் டெல்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கும், பலர் 20 முகாம்களிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். சுமார் 40 நாட்களாக அவர்கள் அனைவருக்கும் உணவு, தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு கவனித்தது. இதே அரசின் முயற்சியால், தமிழக அரசிடம் பேசி அனைவரையும் மே 16-ல் தமிழகம் சென்ற சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழகம் சென்றடைந்தவர்களுக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வரத் தொடங்கி உள்ளது. இதில்முதல்வர் கேஜ்ரிவால் சார்பாகபேசுவதாகக் கூறும் அலுவலர்கள், அவர்களின் நலன் பற்றி விசாரிக்கின்றனர். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என கேஜ்ரிவால் அறிய விரும்புவதாகவும் கேட்டறிகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x