

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உணவு தானியங்கள் உட்பட விவசாய விளை பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்பதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அத்தியாவசியப் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டம் தற்போது அமலில் உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள விளை பொருட்களை அடுத்த மாநிலங்களில் சென்று விற்பனை செய்ய தடை உள்ளது.
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியுடன், மட்டுமே விற்க முடியும். இந்த நிலையில் நாடு முழுவதும் விளைப்பொருட்களை தடையின்றி விற்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையை சியாமா பிரசாத் முகர்ஜி அறக்கட்டளை என மறுபெயரிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலீடுகளை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க வழிகாட்டுதல்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரித்து, அதன் மூலம் தொழில் வளர்ச்சி அடைவதால் வேலைவாய்ப்புகள் பெருகும்.
நாடு முழுவதும் விளைப்பொருட்களை தடையின்றி விற்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக அத்தியாவசியப் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெருமளவு பயன் பெறுவர்.
இவ்வாறு கூறினார்.