Last Updated : 02 Jun, 2020 12:50 PM

 

Published : 02 Jun 2020 12:50 PM
Last Updated : 02 Jun 2020 12:50 PM

அன்னமிடும் கைகளை ஏமாற்றுவதா?: மத்திய அரசு மீது சீதாராம் யெச்சூரி பாய்ச்சல் 

14 காரீப் பயிர்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைவாகவே உயர்த்தியுள்ளது இது விவசாயிகளை மேலும் பலவீனப்படுத்தவே செய்யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

“கட ந்த ஆண்டு என்ன குறைந்தப் பட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது, இன்று அறிவிக்கப்பட்ட விலை என்ன என்ற விவரங்கள் என் கைவசம் உள்ளன.

நெற்பயிருக்கு குவிண்டாலுக்கு ரூ.53 ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு இடுபொருட்கள் விலை அதிகரித்துள்ளன,விவசாயிகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.

ஏற்கெனவே கோவிட் 19 லாக்டவுன் உள்ளிட்ட விவகாரங்களினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.

விவசாயிகள் அரசாங்கத்திடம்தான் விற்கின்றனர், ஆனால் அரசோ இப்போது நாங்கள் பெரிய அளவில் கொள்முதல் செய்து வருகிறோம் என்கிறது. இது இந்தியாவின் அன்னமிட்ட கைகளை ஏமாற்றுவதாகும்.” என்றார் சீதாராம் யெச்சூரி.

நெற்பயிருக்கு குவிண்டாலுக்கு ரூ.53 அதிகப்படுத்திக் கொடுத்துள்ளது மத்திய அரசு இதன் மூலம் குவிண்டாலுக்கு ரூ.1,868 குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு விவசாயிகளுக்குக் கொடுக்கிறது.

பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.260 அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குவிண்டாலுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.5,515 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x