Published : 02 Jun 2020 12:32 PM
Last Updated : 02 Jun 2020 12:32 PM

சமுத்திர சேது; இலங்கையில் இருந்து கடற்படை கப்பலில் தூத்துக்குடி வந்த இந்தியர்கள்; வீடியோ 

கரோனா ஊரடங்கால் இலங்கையில் சிக்கிய தமிழர்கள் உட்பட 650 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு வந்த இந்திய கடற்படை கப்பல் ஜலஸ்வா தூத்துக்குடி வந்து சேர்ந்தது.

கரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் கீழ் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாய் நாட்டுக்கு தொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.

இதன் ஒரு பகுதியான 'சமுத்திர சேது' என்ற திட்டத்தின் கீழ் இலங்கை, மாலத்தீவு மற்றும் ஈரான் நாட்டில் சிக்கியுள்ளவர்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' என்ற கப்பல் இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடுகிறது. இதில் இலங்கையில் இருந்து 650 இந்தியர்களுடன் முதல் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து நேற்று கிளம்பியது.


இந்தக் கப்பல் இன்று காலை தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கரித்தளத்துக்கு வந்து சேர்ந்தது. துறைமுகம் வந்து சேர்ந்த பயணிகள் அனைவரும் போதிய முன்னெச்சரிக்கையுடன் இறக்கப்பட்டு முழுமையான பரிசோதனை செய்யப்படுகின்றனர்.


பின்னர் கப்பலில் ஏற்றப்பட்டனர்.அங்கிருந்து அனைவரும் பேருந்துகள் மூலம் பயணிகள் முனையத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அங்கு சோதனைகள் முடிந்த பிறகு அந்தந்த மாவட்டங்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x