

பிஹாரில் முசாபர்பூர் ரயில்நிலைய நடைமேடையில் இறந்துகிடந்த தனது தாயை எழுப்ப முயலும் குழந்தை தொடர்பான வீடியோ கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. இதைப்பார்த்த நடிகர் ஷாருக்கான் அந்த குழந்தைக்கு ஆதரவு கொடுத்து உதவியுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் நடத்தும் மீர் அறக்கட்டளை அந்த குழந்தைக்கு தேவையான உதவிகளையும், நிதியுதவியும் வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த இரு மாதங்களாக ஏராளமான தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பினர். தொழிலாளர்கள் ஏராளமானோர் கால்நடையாகவும், ரயில்களிலும், சைக்கிளிலும் சொந்த ஊர் திரும்பினார்கள்.
இதில் பிஹார் மாநிலம் முசாபர்பூர் ரயில்நிலைய நடைமேடையில் புலம்பெயர் தொழிலாளியான ஒருபெண் இறந்துகிடந்தார். அவரின் ஒன்றரை வயதுக்குழந்தை தாய் இறந்ததுகூடத் தெரியாமல் தாயின் போர்வை விலக்கிப் பார்த்து எழுப்ப முயல்வதும், அந்தப்போர்வைக்குள் செல்வதுமாக இருந்தது. அதன்பின் விசாரிக்கையில் அந்த பெண் இறந்தது தெரியவந்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் பெரும் வைரலானது. அந்த குழந்தையின் வெகுளித்தனம், தாயின் மரணத்தைக்கூட அறியமுடியாத நிலையில் இருப்பதைப் பார்த்து மக்கள் வேதனை அடைந்தனர். நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும்வேதனைகளை படம்பிடித்து காட்டும் காட்சியாக இது அமைந்திருந்தது
இந்த காட்சிையப் பார்த்த இந்தி நடிகர் ஷாருக்கான் அந்த குழந்ைதக்கு தேவையான நிதியுதவியையும், அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளார். நடிகர் ஷாருக்கான் நடத்தும் மீர் அறக்கட்டளை மூலம் இந்த உதவிகள் அந்த குழந்தைக்கு வழங்கப்பட உள்ளது
இதுதொடர்பாக நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் நேற்று கூறுகையில் “ பெற்றோரை இழந்தவர்களின் வேதனைகளை புரிந்தகொண்டவர்கள் மூலம் அந்த குழந்தைக்கு எப்போதும் ஆதரவு இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்
இதையடுத்து ஷாருக்கான் நடத்தும் மீர் அறக்கட்டளை வெளியிட்ட அறிவி்ப்பில் “ அந்த குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்து சேர உதவியர்களுக்கு நன்றி. தாயை இழந்த அந்த குழந்தை, அவரை எழுப்ப முயற்சித்த அந்த வீடியோ அனைவரையும் வேதனைப்படுத்தியது. இப்போது அந்த குழந்தை அவரி்ன் தாத்தாவின் ஆதரவில் இருக்கிறது, அந்த குழந்தைக்கு நாங்கள் ஆதரவு வழங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளது
அதன்பின் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரி்ல பதிவி்ட்ட கருத்தில் “ அந்த குழந்தையுடன் எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். பெற்றோரை இந்த துரதிர்ஷ்டமான நேரத்தில் அந்த குழந்தைக்கு அனைத்து மனவலிமையும் கிடைக்க நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அந்த குழந்தை எவ்வாறு உணரும்எனக்குத் தெரியும், நம்முடைய அன்பும், ஆதரவும் அந்த குழந்தைக்கு வழங்குவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
மக்கள் பல்வேறு இன்னங்களைச் சந்திக்கும் போதெல்லாம் ஷாருக்கான் தன்னால் இயன்ற உதவிகளை அளித்துவருகிறார். சமீத்தில் மேற்கு வங்கத்தில் புயலால் பாதி்க்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ஷாருக்கான், அவரின் மனைவி காரிகான் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினர்
ஷாருக்கான் நடத்தும் கேகேஆர் அணி, ரெட் சில்லி நிறுவனம், மீர் அறக்கட்டளை,ரெட் சில்லி விஎப்எஸ், ஆகியவை மூலம் கரோனா காலத்தில் ஏராளமான உதவிகள் மக்களுக்கு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் மகாராஷ்டிராவில் மருத்துவப்பணியாளர்களுக்கு 25 ஆயிரம் பிபிஇ கிட்டை ஷாருக்கான் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது