Last Updated : 02 Jun, 2020 07:59 AM

 

Published : 02 Jun 2020 07:59 AM
Last Updated : 02 Jun 2020 07:59 AM

குணமடைந்தோர் அதிகரிப்பு; உலக நாடுகளோடு ஒப்பிடும்போது கரோனா உயிரிழப்பும் குறைவு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

கோப்புப்படம்

புதுடெல்லி


இந்தியாவில் கரோனா வைரஸில் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மற்றொருபுறம் இறப்பு வீதமும் குறைந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் நேற்று இதுவரை இல்லாத வகையில் 8,392 பேர் பாதிக்கப்பட்டனர், 230 பேர் உயிரிழந்து ஒட்டுமொத்த பலி 5,394 ஆக உயர்ந்தனர். உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியிலில் 9-வதுஇடத்திலிருந்து 7-வது இடத்துக்கு இந்தியா நகர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் இன்று கரோனவால் 8,392 பேர் பாதிக்கப்பட்டனர், 230 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் சதீவீதம் 48.19 ஆக உயர்ந்துள்ளது, அதேசமயம் உயிரிழப்பு வீதமும் 2.83சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 15-ம்தேதி நிலவரப்படி கரோனாவிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 11.42 சதவீதமும், மே 3-ம் தேதி 26.59 சதவீதமும், கடந்த மாதம் 18-ம் தேதி 38.29 சதவீதமும்இருந்தது. படிப்படியாக அதிகரித்து 48.19 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பைப் பொறுத்தவரை உலகளவில் 6.19 சதவீதம் இருக்கும் நிலையில் இந்தியாவில் 2.83 சதவீதம் மட்டுமே இருக்கிறது. கடந்த ஏப்ரல் 15-ம் தேதி இந்தியாவில் உயிரழப்பு சதவீதம் 3.30 சதவீதம் இருந்தது, மே3-ம் தேதி 3.25 சதவீதமாகவும், கடந்த 18-ம் தேதி 3.15 சதவீதமாகவும், இ்ப்போது 2.83 சதவீதமாகக் குறைந்துள்ளது

கரோனாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தீவிரமான கண்காணிப்பு, சரியான நேரத்தில் கண்டுபிடித்தல், முறையான மருத்துவசிகிச்சை மூலம் இறப்புவீதம் குறைந்து வருகிறது.

கரோனா காலத்தில் இரு விஷயங்களை கவனிக்க வேண்டும். ஒருபுறம் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,மற்றொருபுறம் கரோனாவில் உயிரிழப்பு குறைந்து வருகிறது.

நாட்டில் கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி, அதிகப்படுத்தியுள்ளோம். 472 அரசு மருத்துவ ஆய்வகங்கள், 204தனியார் ஆய்வகங்கள் மூலம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக 38 லட்சத்து 37 ஆயிரத்து 207 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒருலட்சத்து 180 மாதிரிகள் எடுக்கப்பட்டன.

உலக சுகாதார அமைப்பின் கடந்த 31-ம் தேதி அறிக்கையி்ன் படி, அமெரிக்காவில் ஒரு லட்சத்து ஆயிரத்து 567 ேபர் உயிரிழந்துள்ளனர், அங்கு உயிரிழப்பு 5.92 சதவீதம். பிரிட்டனில் 38,376 பேர் பலியாகியுள்ளனர் உயிரிழப்பு 14.07 சதவீதம்.

இத்தாலியில் (33,340)14.33 சதவீதம், ஸ்பெயினில்(29,043) 12.12 சதவீதம், பிரான்ஸில்(28,271) 19.35 சதவீதம், பிரேசிலில்(27,878) 5.99 சதவீதமாக உயிரிழப்பு இருக்கிறது. மெக்சிக்கோவில் 11.13 சதவீதம், கனடாவில் 7.80 சதவீதம். ஆனால் இந்தியாவில் 2.83சதவீதம் மட்டும்தான்.

இன்னும் இந்தியாவில் சமூகப்பரவல் ஏற்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x