

நகர்ப்புறப் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்துடன் நிதி ஆணையம் ஆலோசனை நடத்தியது.
நகர்ப்புறப் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து என். கே. சிங் தலைமையிலான 15-வது நிதிஆணையம் அதன் உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்
பிரகாஷ் ஜவடேகர் விரிவான ஆலோசனை நடத்தினார். XVFC அறிக்கை 2020-21, காற்றின் தரம் குறித்து நிதி ஆணையம் முதலில் வெளியிட்ட அறிக்கை என்பது நினைவிருக்கலாம். 2020-21ஆம் ஆண்டுக்கான மானியங்களை மட்டும் நிதிஆணையம் பரிந்துரைக்கவில்லை இந்தக் காலத்துக்கான செயல் திட்டத்தையும் வழங்கியது.
2020-21–22 முதல் 2025-26 வரை அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் செய்ய வேண்டிய பரிந்துரைகளை நிதிஆணையம் தற்போது ஆலோசித்து வருகிறது. இந்த நகரங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருத்தமான விதிகளை வகுக்க வேண்டும். இது தொடர்பாக இந்த மானியங்களை செயல்படுத்துவதற்கு இறுதி செய்யப்பட்ட விதிமுறைகளை மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை ஆணையம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
ஆயிரக்கணக்கான நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான மானியங்களை செயல்படுத்துவதில், 2020-21-க்கான நிதி ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்துவது பற்றி ஆலோசிப்பதும், 2021 முதல் 2026ஆம் ஆண்டு வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என அமைச்சகத்திடம் இருந்து கருத்துக்களை கேட்பதும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
காற்றின் தரம் குறித்த தகவல்களைப் பொறுத்தவரை, ஏராளமான நகரங்களில் 984 நெட்வொர்க் மையங்கள் உள்ளன. மேலும் தேசிய காற்று மாசுக்கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் 500 நகரங்களில் ஆட்களுடன் கூடிய 779 மையங்கள், 205 கண்காணிப்பு மையங்கள் உள்ளன. காற்றின் தர அளவீடு மையங்கள் இருந்தாலும், துல்லியமான தகவல்களுக்கு இதை பல இடங்களில் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் வேண்டிய அவசியம் உள்ளது.
காற்றுமாசு தேசிய கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக பல நகரங்களில் இந்தப் பணியை அமைச்சகம், ஐஐடி, ஐஐஎம்கள் மற்றும் என்ஐடி போன்ற அமைப்புகளுடன் இணைந்து முன்பே தொடங்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதி ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்பதற்கு நிபுணர்களின் வழிகாட்டுதல்களை அமைச்சகம் கோரும்.
காற்றின் தரப்பிரச்சினை பெரும்பாலும், உள்ளூர்ச் சூழல் இல்லை என்பதால், இதற்கு பல காரணங்கள் உள்ளன. காற்றின் தரநிர்வாக அணுகுமுறைகளில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
கட்டுமானம் மற்றும் இடிப்புக்கழிவு மேலாண்மைக்குத் தான் அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்கு நிதி ஆணையத்தின் ஆதரவை அரசு கோரும்.
2020-21-ஆம் ஆணடுக்கான XVFC’s அறிக்கையில் டெல்லியின் காற்றுத் தரத்தை சேர்த்ததை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பாராட்டினார். பெருநகரங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் காற்றின் தரத்தில் அடிப்படை மாற்றங்கள் இருக்கும் என அமைச்சர் கூறினார். இது வாகன மாசுவை 30 முதல் 40 சதவீதம் வரையிலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் தரத்தை மேம்படுத்த, மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும், தவறிழைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
நகரங்களில் மாசைக் கட்டுப்படுத்த, கட்டுமானம் மற்றும் இடிப்புக் கழிவுக் கட்டுப்பாடு விதிகளை அமல்படுத்த, தனது அமைச்சகம் விதிமுறைகளைக் கொண்டு வருவதாக, ஆணையத்திடம் அமைச்சர் தெரிவித்தார்.