Last Updated : 31 May, 2020 06:18 PM

 

Published : 31 May 2020 06:18 PM
Last Updated : 31 May 2020 06:18 PM

நாட்டில் உயர் நீதிமன்றங்கள் தனியாக அரசாங்கம் நடத்துகின்றன: சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேச்சு குறித்து காங்கிரஸ் கேள்வி

நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் தனியாக அரசாங்கம் நடத்துகின்றன என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வார்த்தைகள் நீதிமன்றத்தை மிரட்டி அடிபணிய வைப்பதற்கான அர்த்தமா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான கபில் சிபல் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளி்த்தார்.அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் தனியாக அரசாங்கம் நடத்துகின்றன என மத்தியஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசிய வார்த்தைகள் மத்திய அரசின் அகங்காரமான மனநிலையைக் காட்டுகிறது.

துஷார் மேத்தா பேசிய வாரத்தைக்கு அர்த்தம், நீதிமன்றத்தை மிரட்டி அடிபணிய வைக்கிறார்களா என்று நான் வியந்தேன்.

இந்த அகங்காரம் பிடித்த மனநிலையை இதுபோன்று மத்தியஅரசு வெளிப்படுத்தக்கூடாது. கடந்த காலத்திலும் மத்திய அரசு இதேபோன்ற மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. நீதிபதிகள் சுதந்திரமாக சட்டத்துக்கு உட்பட்டு நியாயமான முறையில் தீர்ப்புகள் வழங்கும்போது அந்த தீர்ப்புகள் மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தினால், அவர்களுக்கு உகந்ததாக இல்லாவிட்டால் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவங்களை உயர் நீதிமன்றமும், அரசும் கவனிக்க வேண்டும். நீதிமன்றங்கள் மட்டும் உயிர்ப்புடன் நீதிபரிலாணத்தை வழங்காவிட்டால், ஜனநாயகச் சூழலில் இதுபோன்ற தாக்குதல், கருத்து வெளிப்பாடு உகந்ததல்ல.

பத்திரிகையாளர்களை பருந்துகள் என துஷார் மேத்தாவும், அரசும் விமர்சிக்கிறார்கள். மத்தியஅரசு கலாச்சாரத்தை மறந்துவிட்டதாக உணர்கிறேன். இதை நாங்கள் கண்டிக்கிறோம். நாட்டில் உள்ள மோசமான சூழலைக் கண்டறிந்து அதைத் துடைத்தெறியும் பணியில் பத்திரிகையாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களை நாகரிகமி்ல்லாமல் விமர்சிக்கிறார்.

மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான சமூக விலகல் அளவு அதிகரி்த்துள்ளது. அதனால்தான், நிதர்சனக்களத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை, குறிப்பாக ஏழைகள் எதிர்கொள்ளும் துயரங்களை எவ்வாறு தீர்ப்பது என அரசுக்குத் தெரியவில்லை.

எதிர்காலத்தில் வரலாற்று நூல்கள் அனைத்தும் கெட்ட சம்பவங்கள் நடப்பதை உண்ர்த்தும் அரசாக பாஜக அரசை அங்கீகரிக்கும். மார்ச் 24-ம் தேதிவரை ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்துவிட்டு, பிரதமர் மோடி ஜனநாயகத்தை பாதுகாப்பதாகப் பேசுகிறார்.

மார்ச் 24-ம் தேதிக்கு முன் அரசின் திட்டம் என்பது அரசியலமைப்புச்சட்டம் 370 பிரிவை நீக்குதல், சட்டவிரோத தடுப்புச்சட்டம், என்ஆர்சி, மக்கள் தொகை பதிவேடு, சிஏஏ கொண்டுவருதல், முத்தலாக் ரத்து, கல்வி, சுகாதாரம், ஏழைகளைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பதாகவே இருந்தது. மக்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் மீது இந்த அரசு கடந்த 6 ஆண்டுகளாக அக்கறை கொண்டிருந்தால் இன்று இந்தியா வேறுவிதமாக மாறியிருக்கும்

மத்திய அரால் எந்த விதமான பயனும் இ்ல்லை என்பதை கரோனா வைரஸ் உணர்த்திவிட்டது. தற்போதைய சவால்களை சமாளிக்க ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் நிற்பதால் சமூகத்தில் உருவாக்கப்பட்ட பிளவு மக்களால் சரி செய்யப்பட்டுள்ளது.

நான் பிரதமரிடம் கேட்கிறேன், இப்போதாவது சொல்லுங்கள், சக இந்தியர்கள் குறித்து உங்கள் மதிப்பீடு, விளக்கம் என்ன? கடந்த மார்ச் 24-ம் தேதிக்குப்பின் உங்களின் விளக்கம் பொருத்தமாக இருக்குமா? நாட்டின் எதிர்காலத்தை நீங்கள் கையாளும் விதத்தில் குறைந்தபட்சம் இப்போதாவது மாற்றம்செய்யுங்கள்.

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x