ஜூன் 30-ம் தேதிவரை சர்வதேச விமானப்போக்குவரத்து ரத்து: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வரும் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு வரை வர்த்தகரீதியான சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ)அறிவித்துள்ளது

கரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுன் 4-வது கட்டம் இன்றுடன் முடிகிறது. ஜுன் 8-ம் தேதி முதல் லாக்டவுனைத் தளர்த்துவதற்கான முதல்கட்டம் தொடங்குவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்து, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியி்ட்டது. இதன்படி வரும் 8-ம் தேதி முதல் ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்கள், உணவகங்கள், விருந்தினர் சேவைத்துறை ஆகியவை இயங்க அனுமதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து விமானப்போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விமானப்போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் “ வரும் ஜூன் 30-ம் தேதிவரை இந்தியாவிலிருந்து எந்தவிதமான சர்வதேச பயணிகள் விமானப்போக்குவரத்தும் இயங்காது.

அவ்வாறு சர்வதேச விமாநிறுவனங்கள் தங்கள் விமான சேவையை தொடங்கினால் அதற்குரிய வகையில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் சூழல்களுக்கு ஏற்ப, கரோனா வைரஸ் பரவலை மதிப்பீடு செய்து அடுத்த கட்ட அறிவிப்பு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேசமயம் லாக்டவுனால் கடந்த 2 மாதங்களாக இயக்காமல் இருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து கடந்த 25-ம் தேதிமுதல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in