Last Updated : 30 May, 2020 08:06 PM

 

Published : 30 May 2020 08:06 PM
Last Updated : 30 May 2020 08:06 PM

மும்பையில் இருந்து 8.5 லட்சம் பேர் வெளியேற்றம்: தாராவியில் மக்கள் நெருக்கடி குறைந்தது

இந்தியாவிலேயே மிக மோசமாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நகரமான மும்பையில் இருந்து தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.

"மொத்தம் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல விண்ணப்பித்திருந்தனர். அதில், 6.5 லட்சம் பேர் சிறப்பு ரயில்கள் மூலமாகவும், 2 லட்சம் பேர் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிவிட்டனர். அதில் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்" என்று மும்பை மாநகர் காவல் துணை ஆணையர் அசோக் பிரணயா கூறியுள்ளார்.

இவ்வாறு வெளியேறியவர்களில் மும்பைக்குத் தற்காலிகமாகச் சென்றிருந்த தமிழர்களும், அங்கேயே நிரந்தரமாக வசிக்கும் தமிழர்களும் சுமார் 60 ஆயிரம் பேர் இருப்பார்கள் என்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் கூறுகின்றன.

"தாராவியில் வசிக்கும் 8 லட்சம் பேரில் சரி பாதிப் பேர் தமிழர்கள். மற்றவர்கள் எல்லாம் பெரும்பாலும் தமிழர்களின் வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கும் வடமாநிலத்தவர்கள். பொதுமுடக்கம் பிறப்பித்தவுடன் அவ்வாறு வாடகைக்கு குடியிருப்போர் தாராவியில் இருந்து வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். இப்போது தமிழர்களிலும் ஒரு பகுதியினர் ரயில் மற்றும் பிற வாகனங்கள் வாயிலாக தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். இதனால் தாராவியில் மக்கள் நெருக்கடி குறைந்துள்ளது.

பொதுக் கழிப்பறை உள்ளிட்ட இடங்களிலும் வரிசை காணப்படுவதில்லை. இவர்களை முன்கூட்டியே சொந்த மாநிலங்களுக்கு அனுப்பியிருந்தால், தாராவியில் இவ்வளவு மோசமாக கரோனா தொற்று பாதித்திருக்காது. இன்றைய நிலவரப்படி தாராவியில் மட்டும் 1,715 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்கிறார்கள் மும்பை தமிழ்ச் சங்க நிர்வாகிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x