

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நம்முடைய தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கலைஞர்கள், சிறு,குறுந்தொழிலில் பணியாற்றும் ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள், மக்கள் அனைவரும் பெரிய துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் துன்பத்தை ஒழிக்க நாங்கள் ஒற்றுமையாக, தீர்மானத்துடன் பணியாற்றி வருகிறோம் என்று பிரதமர் மோடி 2.0-வின் ஓராண்டு நிறைவையொட்டி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிமிகுந்த தலைமையின் கீழ் 2ம் முறை ஆட்சியின் முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ளோம். இதில் சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா சாத் என்ற அனைவரையும் உள்ளட்டக்கிய கொள்கையுடன் முழுக்க முழுக்க வரலாற்றுச் சிறப்பு மிக்க சீர்த்திருத்தங்கள் சாதனைகள் நிரம்பியுள்ளன.
பிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டுகால ஆட்சியை இந்தியாவை பொருளாதார சூப்பர் பவராக்குவதற்கான அடித்தளம் என்றால் 2வது 5 ஆண்டுகால ஆட்சி முதல் ஓராண்டை நிறைவு செய்கையில் வரலாற்று சிறப்பு மிக்க சீர்த்திருத்தங்கள், சாதனைகள் அடங்கியதன் தொடக்கமாக உள்ளது.
அதாவது ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத் என்ற ஒரே இந்தியா, ஆரோக்கிய இந்தியா என்ற நோக்கத்தை உள்ளடக்கிய பெண்களை மதிக்கும் முத்தலாக் ஒழிப்பு, பயங்கரவாதத்தை ஒழிக்க காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்குரிய 370ம் பிரிவு நீக்கம், ராமஜென்மபூமி, குடியுரிமைச் சட்டம், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை இந்த ஆட்சியின் சாதனைகள்.
கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி சரியான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு கூறினார் யோகி ஆதித்யநாத்.