Published : 30 May 2020 06:22 am

Updated : 30 May 2020 06:25 am

 

Published : 30 May 2020 06:22 AM
Last Updated : 30 May 2020 06:25 AM

11 இலக்க மொபைல் எண் பயன்பாட்டுக்கு ட்ராய் பரிந்துரை

11-digit-mobile-number

புதுடெல்லி

11 இலக்கத்தில் மொபைல் எண் ஒதுக்கீடு செய்ய தொலைதொடர்பு ஆணைய அமைப்பான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.

தகவல் தொடர்பு மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவுக்கு தொடர்பு எண்களை ஒதுக்கீடு செய்ய ட்ராய்இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது. ட்ராய் அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தற்போது வழங்கப்படும் 10 இலக்க எண்களுக்கு பதில், 11 இலக்க எண்களாக வழங்கலாம். தற்போது லேண்ட் லைன் பிக்சட்கனெக்‌ஷன்கள் மூலம் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும் போது 10 இலக்க எண்களுக்கு முன்பூஜ்யத்தைப் பயன்படுத்தலாம். இப்படி 11 இலக்க எண்களாக மாற்றும் போது புதிய கனெக்‌ஷன்களுக்கு தொடர்பு எண்கள் வழங்குவது எளிதாக இருக்கும்’’ என்று ட்ராய் கூறியுள்ளது.

இந்த கொள்கைப்படி எண்கள் ஒதுக்கப்பட்டால், 1000 கோடி எண்கள் வழங்க முடியும். அதில் இந்தியாவின் தேவை 70 சதவீதம் பூர்த்தியானால் கூட, மீதம் 700 கோடி எண்கள் இருக்கும் என்றுட்ராய் கூறியுள்ளது. மேலும்,டாங்கிள்களுக்கு வழங்கப்படும் 10 இலக்க எண்களை 13 இலக்க எண்களாக வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

11 digit mobile number11 இலக்க மொபைல் எண்ட்ராய் பரிந்துரைTRAI

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author