5-ம் கட்டமாக மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா?- பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை

5-ம் கட்டமாக மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா?- பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை
Updated on
1 min read

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடியுடன் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவலை கட் டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதுவரை 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 3,4-ம் கட்ட ஊரடங்கின்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில்,4-ம் கட்ட ஊர டங்கு நாளையுடன் முடிவடை கிறது. வழக்கமாக ஊரடங்கு நிறை வடைவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுவார். இந்த முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்து மாநில முதல்வர்களுடன் தொலை பேசியில் நேற்று முன்தினம் ஆலோ சனை நடத்தினார். ஒவ்வொரு முதல் வருடனும் 5 நிமிடங்கள் அவர் பேசினார். கரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு, பொருளாதார நடவடிக்கைகள், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து முதல்வர்களின் கருத்து களை அவர் கேட்டறிந்தார். பெரும் பாலான முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை, அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது மாநில முதல்வர்களின் கருத்து களை பிரதமரிடம் அவர் எடுத் துரைத்தார். ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினர். 5-ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு தரப்பில் இன்று அதிகாரபூர்வமாக அறி விப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம். எனினும் இந்த முறை ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க வாய்ப்பு வழங்கப்படும். அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். தளர்வுகளை அமல் படுத்தலாம். வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படக்கூடும். சமூக இடை வெளியை பின்பற்றி ஓட்டல்கள் செயல்பட அனுமதி வழங்கப் படலாம்.

சர்வதேச விமான சேவைக்கு தொடர்ந்து தடை நீடிக்கும். பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது. திரையரங்குகள், வர்த்தக வளாகங்கள், உடற்பயிற்சி, மதுபான கூடங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

இவ்வாறு மத்திய அரசு வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in