

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ஹரியாணாவில் ரிக்டர் அளவில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவானது.
ஹரியாணா மாநிலம் ரோஹ்தக் பகுதியில் இன்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அடுத்தடுத்து சில முறை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்தனர்.
உடனடியாக வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இரவு நெடுநேரமாகியும் அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் வெளியிலேயே இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் வெளியானதும் சமூகவலைதளங்களில் மக்கள் இதுதொடர்பான தகவல்களை பதிவிட்டனர். இதனால் மக்களிடம் பீதி ஏற்பட்டது.