சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மரணம்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மரணம்
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வரும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி இன்று காலமானார் (வயது 74).

மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் ராய்ப்பூரில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 3 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரின் உடல்நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்ற நிலையில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இன்று பிற்பகல் அவரது உடல்நிலை மிகவும் மோசடைந்து உயிரிழந்தார். அவர் மரணமடைந்த செய்தியை அவரது மகன் அமித் ஜோகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியான அஜித் ஜோகி 1946-ல் பிலாஸ்பூரில் பிறந்தவர். போபாலில் உள்ள ஐஐடியில் படித்த ஜோகி, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இ்ந்தூரில் 1981 முதல் 1985 வரை மாவட்ட ஆட்சியராகஇருந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்தார்

காங்கிரஸ் கட்சி சார்பில் இரு முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யான அஜித் ஜோகி வெற்றி அனைவரும் அறியும்படி செயல்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிரிக்கப்பட்டபி்ன் 2000முதல் 2003-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக ஜோகி இருந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன்ஏற்பட்ட மனக்கசப்பால் 2016-ம்ஆண்டு பிரிந்து சென்று ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை உருவாக்கினார். சமீபத்தில் நடந்த தேர்தலில் மார்வாஹி தொகுதியில் போட்டியிட்டு வென்று ஜோகி எம்எல்ஏவாக உள்ளார்.

சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நீண்டகாலம் நட்பு பாராட்டி வந்தபோதும் அஜித் ஜோகிக்கும், ராகுல் காந்திக்கும் இணக்கமான உறவு இல்லை. இதையடுத்தே அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக்கட்சியை தொடங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in