Last Updated : 29 May, 2020 03:11 PM

 

Published : 29 May 2020 03:11 PM
Last Updated : 29 May 2020 03:11 PM

மகாராஷ்ட்ராவை ஆட்டிப்படைக்கும் கரோனா: மும்பையில் 99% ஐசியு படுக்கைகள் நிரம்பின

இந்தியாவின் கரோனா மையமாக மாறிவிட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகர மருத்துவமனைகளில் 99% ஐசியு படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 7 ஆயிரத்து 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 175 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்தறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கரோனாவில் ஓட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து799 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது. 89ஆயிரத்து 987 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,982 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 960 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 321 ஆகவும் அதிகரித்துள்ளது” என்று சுகாதார அமைச்சகம் இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,616 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பிர்ஹன் மும்பை மாநகராட்சித் தகவல்களின் படி 645 ஐசியு படுக்கைகளில் 99% நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 4,292 படுக்கைகளில் 65% படுக்கைகள் நிரம்பியுள்ளன.

373 வென்ட்டிலேட்டர்களில் 73% உபயோகத்தில் உள்ளன, வியாழக்கிழமை மட்டும் மும்பையில் மேலும் 1438 பேருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளன. இதன் மூலம் மும்பையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 35,273 ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை மட்டும் 38 பேர் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x