Published : 29 May 2020 06:35 AM
Last Updated : 29 May 2020 06:35 AM

வட மாநிலங்களில் பரவியுள்ள வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய வேளாண் அமைச்சகம் அறிவிப்பு

வட மாநிலங்களில் பரவி, பயிர் களை நாசப்படுத்தும் வெட்டுக் கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இந் திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக் கிளிகள் உத்தரபிரதேசம், ராஜஸ் தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத் தன. இவை உணவுப் பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வருகின்றன.

இது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. உணவுப் பயிர்களை வெட்டுக்கிளி கள் நாசம் செய்து வருவதால், உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வெட்டுக்கிளி களை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவவும் மத் திய வேளாண் அமைச்சகம் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப் தாவது:

ராஜஸ்தானில் பார்மர், ஜோத்பூர், நாகவுர், பிகானீர், கங்காநகர், ஹனுமன்கர், சிகார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாவட்டங் களிலும் மத்திய பிரதேசத்தில் சத்னா, குவாலியர், ராஜ்கர், பைதுல், தேவாஸ் ஆகர் மால்வா ஆகிய மாவட்டங்களிலும் தற் போது வெட்டுக்கிளிகள் கூட்டம் பெருந்திரளாக காணப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத் தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன.

பூச்சிக்கொல்லி தெளிப்பதற் காக 89 தீயணைப்பு படைகள், 120 கண்காணிப்பு சாதனங்கள், ஸ்பிரே சாதனத்துடன் கூடிய 47 கட்டுப் பாட்டு வாகனங்கள் மற்றும் 810 டிராக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. வெட்டுக்கிளிகள் கட்டுப்படுத்தப்படும் வரை இப் பணி தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளி படையெடுப்பு தொடர்பாக வட மகாராஷ்டிராவில் 4 மாவட்டங்கள் மற்றும் விதர்பாவில் 11 மாவட்டங்களுக்கு மாநில வேளாண் துறை எச்சரிக்கை விடுத்தது.

டெல்லியில் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அதை சமாளிப்பதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு டெல்லி வளர்ச்சி ஆணையம் வழங்கியுள்ளது. வெட்டுக்கிளி தாக்குதலை தடுப்பது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பகலில் பறப்பதும் இரவு ஓய்வு எடுப்பதும் வெட்டுக்கிளிகளின் வழக்கமாக உள்ளது. அற்றை ஓய்வெடுக்க அனுமதிக்கக் கூடாது. தேவைக்கேற்ப வெட்டுக்கிளிகள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஆலோசனை கூறப் பட்டுள்ளது.

ஒடிசா அரசும் இதுதொடர் பான வழிகாட்டு விதிகளை விவ சாயிகளுக்கு அறிவித்துள்ளது. வேப்ப எண்ணெய் அடிப்படை யிலான பூச்சிக்கொல்லிகளை பயிர்கள் மீது தெளிக்குமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டு உள்ளது.

சந்திரசேகர ராவ் ஆலோசனை

மகாராஷ்டிரா - தெலங்கானா மாநில எல்லையில் உள்ள நிஜாமா பாத், காமா ரெட்டி, அசீஃபாபாத், மிஞ்சிராலா, ஜயசங்கர் பூபால பல்லி ஆகிய மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் படை எடுத்துள்ள தாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபற்றி தகவலறிந்த தெலங் கானா முதல்வர் சந்திரசேகர ராவ், வேளாண் துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய முதல்வர், ‘‘மகாராஷ்டிரா எல்லையில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து, வெட்டுக்கிளிகள் தெலங்கானாவுக் குள் நுழைவதற்கு முன்பே அவற்றை அழிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x