அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 31 மே முதல் ஜுன் 4-ம் தேதிக்குள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேற்குதிசை காற்று வலுவடைந்து வருவதாலும், வெப்பச்சலன மேகங்கள் அதிகரிப்பதாலும் மாலத்தீவுகள்-கன்னியாகுமரியின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் தெற்குப் பிராந்தியத்தின் சில பகுதிகள், அந்தமான் கடலின் எஞ்சிய பகுதிகள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை முன்னேறி வருகிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் மாலத்தீவு-கன்னியாகுமரியின் மேலும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் முன்னோக்கி நகர்வதற்கான சாதகமான சூழல்கள் நிலவி வருகிறது.

அரபிக் கடலின் தென்கிழக்கு & அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 31 மே முதல் 4 ஜுன் 2020 வரை ஏற்படலாம். இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது 1, ஜுன் 2020 முதல் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளன.

அரபிக்கடலின் மேற்கு மத்தியப் பிராந்தியம் மீது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அதே பிராந்தியத்தில் இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறக் கூடும். அடுத்த மூன்று நாட்களில் இது தெற்கு ஓமன் மற்றும் கிழக்கு ஏமன் கடற்கரையை நோக்கி வடமேற்காக நகரக் கூடும்.

மீனவர்கள் 29, மே 2020 முதல் 1, ஜுன் 2020 வரை மேற்குமத்திய அரபிக்கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

31 மே, 2020 முதல் 4 ஜுன் 2020 வரை அரபிக்கடலின் தென் கிழக்கு & கிழக்கு மத்திய பகுதிகளுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என மேலும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in