

தொழிலாளர் நலன் தொடர்பான அண்மைத் தகவல்களை தெரிந்து கொள்ள சமூகவலைதளமான ட்விட்டரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அண்மைத் தரவுகளை அளிப்பதற்கான @LabourDG என்ற ட்விட்டர் கணக்கினை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் ஹீராலால் சமரியா, தொழிலாளர் நல அமைப்பின் தலைமை இயக்குநர் டிபிஎஸ் நேகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ட்விட்டர் கணக்கில் இந்திய தொழிலாளர் சந்தை அலகுகள் தொடர்பான அண்மைத் தரவுகள் தொடர்ச்சியாக பகிரப்படும் என்று அமைச்சர் ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்